
50- ஆவது இடுகை என் அன்பு நண்பருக்கு
------------------------
நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்....
-----------------------------------
வானத்தில்
நிறைய நட்சத்திரங்கள்
பூமி எதிர்பார்ப்பது
மழை !
------------------------------------
தூரத்திலிருந்து
பார்க்கும்போது
அழகாகத்தான்
இருக்கிறது
ஊர்!
-------------------------------
ஓவ்வொருவர்
கையிலும்
தராசு
தன்னை
எடைபோட
அல்ல!
----------------------------
பெரிய
வித்தியாசமொன்றுமில்லை
அடிப்படையில்
தீப்பெட்டிப்படம்
சேகரித்துக்கொண்டிருக்கிறான்
என் மகன்
கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான் !
----------------------------------
அத்தனையும்
விக்ரமாதித்யன் கவிதைகள்
----------------------------------
குறிப்பு:
/6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டிலுமே நனையப் பிடிக்கும்.
(இந்தக் கேள்விக்கு குளிக்க’ என்கிற பதம் தவறென்று நினைக்கிறேன். இவற்றில் குளிப்பதைவிட நனைதலைத்தான்தான் மிக விரும்புவார்கள்... இல்லையா? அருவி ஒருபடி மேல். (அருவி என்றது விக்ரமாதித்யன் கவிதை நினைவுக்கு வருகிறது... எங்கே யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்!)/
--------------------------
/@ திகழ்மிளிர்
நன்றி! (விக்ரமாதித்யனின் அந்தக் கவிதை என்னான்னு சொல்லவேல்ல? உங்களுக்குத்தான் கவிதைகள் மிகப்பிடிக்குமே?)/
Labels: கவிதை